BK Murli 8 March 2018 Tamil


08.03.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! மிகவும் அன்பான தந்தையின் சரியான அறிமுகத்தை கொடுப்பதற்கான யுக்திகளை உருவாக்க வேண்டும், துல்லியமான வார்த்தைகளால் அல்லாவின் அறிமுகத்தைக் கொடுத்தீர்கள் என்றால் எங்கும் நிறைந்தவர் (சர்வ வியாபி) என்ற விசயம் முடிவுக்கு வந்து விடும்.



கேள்வி:

அழிவற்ற ஞான இரத்தினங்களை தேர்ந்தெடுக்கும் குழந்தைகளின் கடமை என்ன?



பதில்:

ஞானத்தின் அனைத்து விசயங்களையும் நல்ல விதமாக மனன சிந்தனை செய்து அனைவருக்கும் ஒரு தந்தையின் சரியான அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். புண்ணிய ஆத்மாவாக ஆக்குவதன் கூடவே பாவாத்மாவாக யார் ஆக்கியது என்ற விழிப்புணர்வை கொடுக்க வேண்டியது குழந்தைகளாகிய உங்களின் கடமையாகும். அனைவரையும் இராவணனின் இலந்தைப் பழத்தை எடுப்பதிலிருந்து விடுவித்து ஞான இரத்தினங்களை எடுக்க வைக்க வேண்டும். சேவைக்கான வித விதமான யுக்திகளை உருவாக்க வேண்டும். சேவையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் போதுதான் அபாரமான குஷி இருக்கும்.



பாடல்:

பிரியமானவரே, வந்து சந்தியுங்கள். . .



ஓம் சாந்தி.

தந்தையாகிய பரமபிதா எப்போதும் படைப்பவர் எனப்படுகிறார். இந்த கால்நடைகள், பறவைகள் என அனைத்து படைப்புகளையும் அவர் படைக்கிறார் என மனிதர்கள் சொல்லிவிடுகின்றனர். ஆனால், முதன் முதலில் மனிதர்களின் விசயத்தைப் புரிந்து கொள்ளுங்கள் என அவர்களுக்குப் புரிய வையுங்கள்- படைப்பவராகிய பரமபிதா மனித சிருஷ்டியை எப்படி படைக்கிறார். மனிதர்கள்தான் அவரை தந்தை என சொல்லி அழைக்கின்றனர், ஏனென்றால் துக்கம் நிறைந்தவர்களாக இருக்கின்றனர். அனைவருமே அந்த ஒரு படைப்பவரை நினைவு செய்கின்றனர். ஆகவே, முதன் முதலில் மனித சிருஷ்டியை படைப்பவர் யார் என புரிய வைக்க வேண்டும். அந்த படைப்பவர்தான் அனைவருக்கும் தந்தை ஆவார். முதன் முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். ஆத்மாவுக்கு தனது அறிமுகமோ தந்தையின் அறிமுகமோ கிடையாது. ஒருவேளை அஹம் (சுயம்) ஆத்மாவின் அறிமுகம் இருந்தது என்றால் நாம் யாருடைய குழந்தை என்பதும் புரியும். நாம் பரமபிதா பரமாத்மாவின் குழந்தைகள். அந்த தந்தை படைப்பவர் எனும்போது கண்டிப்பாக முதன் முதலில் மனித சிருஷ்டியைப் படைப்பார், அது புதிய உலகம் அதாவது சொர்க்கமாக இருக்கும். தந்தை கண்டிப்பாக சொர்க்கத்தைத்தான் படைப்பார். தந்தை துக்கத்திற்காக படைப்பை (உலகை) படைப்பார் என்பது நடக்காத ஒன்றாகும். நாம் அந்த தந்தையின் குழந்தைகள், அந்த தந்தை சொர்க்கத்தைப் படைக்கிறார் எனும்போது நாமும் கூட அங்கேதான் இருக்க வேண்டுமா அல்லது பரமதாமத்தில் இருக்க வேண்டுமா? ஆனால் நாம் நடிப்பை நடிப்பதற்காக இங்கே வர வேண்டியிருக்கிறது. இது மனன சிந்தனை செய்வதற்கான யுக்திகளாகும். எவ்வளவு சமயம் கிடைத்தாலும் இதே மனன சிந்தனை செய்து கொண்டிருக்க வேண்டும். சாது சன்னியாசி முதலான யாருமே சரியான முறையில் தந்தையை அறிந்து கொள்ளவில்லை. படைப்பவர் கண்டிப்பாக சொர்க்கத்தைத்தான் படைப்பார் எனும்போது பிறகு அனைத்து ஆத்மாக்களும் நிர்வாண தாமத்தில் இருக்க வேண்டும். அந்த நிர்வாண தாமம் ஆத்மாக்களாகிய நம் அனைவரின் வீடாகும். அங்குதான் தந்தையும் இருக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடம் புத்தியின் தொடர்பை இணைப்பதற்கான முயற்சியை செய்ய வேண்டும். புத்தியின் தொடர்பு இல்லாத காரணத்தினால்தான் மனிதர்களால் பாவங்கள் ஏற்படுகின்றன அல்லது தாரணை செய்ய முடிவதில்லை. தந்தையை நினைவு செய்வதில்லை. பகவான் ஒருவரே ஆவார். அவர் மிகவும் அன்பானவர், சொர்க்கத்தைப் படைப்பவர் ஆவார். அங்கே மிகவும் சுகம் இருக்கும். இங்கே துக்கம் இருப்பதனால்தான் பகவானை நினைக்கின்றனர். தந்தை குழந்தைகளுக்கு சுகத்திற்காகத்தான் பிறவி கொடுக்கிறார். சத்யுகம், திரேதாயுகம் இரண்டும் சுகதாமம் என்றுதான் சொல்லப்படுகிறது. இப்போது கலியுகமாக இருக்கிறது. இதன் பிறகு சத்யுகம் வரவேண்டும். எனவே தந்தையும் வர வேண்டியுள்ளது. இப்படியாக மனன சிந்தனை செய்து பிறகு மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும். இங்கே உங்களுக்கு தந்தையின் மூலம் தந்தையின் அறிமுகம் கிடைக்கிறது. மனிதர்கள் மிகவும் அன்பான அந்த தந்தையை தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். தந்தையைத் தெரிந்து கொள்ளாததால் தம்மை அவருடைய குழந்தை என்றும் புரிந்து கொள்வதில்லை. நாம் தந்தையைத் தெரிந்து கொண்டிருப்பதால் அவரை நினைவு செய்கிறோம். அவர் அனைத்து ஆத்மாக்களின் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை ஆவார். அந்த நிராகாரமானவர் (உடலற்றவர்) இந்த சாகாரமான (ஸ்தூலமான) பிரஜாபிதாவின் மூலம் படைப்பை படைக்கிறார். பிரஜாபிதா பிரம்மா இருக்கிறார், பிராமண பிராமணியரும் இருக்கின்றனர். கண்டிப்பாக பிரஜாபிதா பிரம்மாவின் தந்தை பரமபிதாதான் ஆவார், அவர் படைப்பவர் எனப்படுகிறார். யார் வந்தாலும் முதன் முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். எப்போது அல்லாவின் நினைவு ஏற்படுகிறதோ அப்போது மேற்கொண்டு புரிய வைக்க முடியும். அல்லாவைத் தெரிந்து கொள்ளாமல் வேறு எதுவும் புரிந்து கொள்ள முடியாது. இவர்களின் விளக்கம் மிகவும் துல்லியமாக (தெளிவாக) இருக்கிறது என மனிதர்கள் புரிந்து கொள்ளுமாறு அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அந்த எல்லைக்கப்பாற்பட்ட தந்தை சொர்க்கத்தைப் படைப்பவர் என இது போல வேறு யாரும் புரிய வைக்க மாட்டார்கள். கண்டிப்பாக நரகத்தைப் படைப்பவரும் யாரோ ஒருவர் இருப்பார். தூய்மையானவராக ஆக்கக் கூடிய ஒரு தந்தை இருந்தார் என்றால் கண்டிப்பாக தூய்மையற்றவர்களாக ஆக்குபவரும் யாரோ ஒருவர் இருப்பார். இதனை நல்ல விதமாக புரிய வைக்க வேண்டும். நாம் நினைவு செய்யக் கூடிய அந்த தந்தை யார்? இராவணனை நினைவு செய்ய மாட்டார்கள். மனிதர்களுக்கு தூய்மையாக்கக் கூடிய இராமனாகிய பரமாத்மாவையும் தெரியாது, தூய்மையற்றவர்களாக ஆக்கக் கூடிய இராவணனையும் தெரியாது, முற்றிலும் அறியாமையில் இருக்கின்றனர். படிவத்தை நிரப்பும் நேரத்தில் கூட முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். உங்களுடைய ஆத்மாவின் தந்தை யார்? இந்த கேள்வியை வேறு யாரும் கேட்க முடியாது. ஆத்மா ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கின்றது. ஜீவாத்மா, பாவாத்மா, புண்ணிய ஆத்மா என சொல்லப்படுகிறது அல்லவா. புண்ணிய ஆத்மாவாக தந்தைதான் ஆக்குகிறார், பிறகு இவர்களை பாவாத்மாவாக யார் ஆக்குகிறார்? இதனை கண்டிப்பாகப் புரிய வைக்க வேண்டும். சொர்க்கத்தைப் படைக்கும் தந்தை, நாம் அவருடைய குழந்தைகள், அவரை நீங்கள் அறிவீர்களா? அவர் கண்டிப்பாக தூய்மையான உலகத்தைத்தானே படைப்பவராக இருப்பார்? இப்போது தூய்மையற்ற உலகமாக இருக்கிறது, ஆகையால் பதித பாவனா வாருங்கள் என மனிதர்களும் பாடுகின்றனர். இவ்வளவு தூய்மையற்ற மனிதர்கள் அனைவரையும் தூய்மையாக்குவது யார்? சர்வவியாபி என்றால் பிறகு பரமபிதா பரமாத்மா வாருங்கள் என்ற இந்த விசயம் எழ முடியாது. சர்வவியாபி என்றால் பிறகு அவரை நினைவு செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது. இப்போது நான் உங்களுக்கு மிக நல்ல வழியை கொடுக்கிறேன். பிரம்மாவின் வழி புகழ் வாய்ந்தது அல்லவா. நாம் பிரம்மாவின் முக வம்சாவளி பிராமண பிராமணிகள் ஆவோம். பிரம்மாவுக்கும் கூட வழி கொடுப்பவர் கண்டிப்பாக உயர்ந்தவராக இருப்பார். பரமபிதா பரமாத்மா சிவனின் புதல்வர் பிரம்மா. இவர் ஆத்மாக்களின் தந்தை ஆவார். அவர் பிரஜாபிதா ஆவார். குழந்தைகளாகிய நீங்கள் சேவைக்காக இப்படியாக மனன சிந்தனை செய்தீர்கள் என்றால் மிகவும் குஷி இருக்கும். யாராவது வந்தார்கள் என்றால் அவர்களுக்கு ஞான இரத்தினங்களைக் கொடுக்க வேண்டும். தந்தை வந்து ஞான இரத்தினங்களை தேர்ந்தெடுக்க வைக்கிறார், அதன் மூலம் நாம் உலகின் எஜமானாக ஆகிறோம். பிறகு இராவணன் வந்து இலந்தைப் பழத்தை எடுக்க வைக்கிறார். சிவனின் உருவச் சிலை, தேவதைகளின் உருவச் சிலைகள் அனைத்தும் கல்லாலானதாகத்தான் உள்ளன. கல்லை பூஜை செய்து செய்து கல்புத்தியாக ஆகி விடுகின்றனர். சிவனுடையதும் கல்லாலான மூர்த்தி உள்ளது. கண்டிப்பாக ஏதோ ஒரு சமயத்தில் சிவபாபா சைதன்யத்தில் (உயிரோட்டமாய்) வந்து படிக்க வைத்திருப்பார். பிரஜாபிதா பிரம்மாவும் இருப்பார். பிரம்மாகுமாரி சரஸ்வதியும் இருப்பார். இப்போது நடைமுறையில் இருக்கின்றனர். அனைவருடைய மன விருப்பங்களையும் நிறைவேற்றுபவர் என இவரைப் பற்றி புகழ் பாடல் உள்ளது. அழிவற்ற ஞான ரத்தினங்களை தானம் கொடுக்கும் ஞானத்தின் இறைவி (தேவி). அவர்கள் பிறகு சரஸ்வதிக்கு வீணையைக் கொடுத்து விட்டனர். இந்த அனைத்து விசயங்களும் புத்தியில் வர வேண்டும், சொற்பொழிவு கொடுக்க வேண்டும் என்றால் மனன சிந்தனை செய்ய வேண்டும். முதலில் சொற்பொழிவுக்கான விசயத்தை எழுதிக் கொண்டு பிறகு திருத்தங்கள் செய்ய வேண்டும். பெரிய பெரிய பேச்சாளர்களாக இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் பேசுவார்கள். முற்றிலும் துல்லியமாக சொல்வார்கள். கொஞ்சம் தடுமாறினாலும் கௌரவம் போய் விடும். முன் கூட்டியே முழுமையாக பயிற்சி செய்து கொள்வார்கள். இங்கும் கூட இதெல்லாம் புத்தியில் இருக்க வேண்டும், அப்போது பிறருக்கு தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க முடியும். சேவை செய்ய வேண்டும். விகாரம் நிறைந்த குருமார்களின் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சத்கதியை கொடுக்க முடியாது. நிராகார தந்தைதான் பதித பாவனர் (தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர்) என சொல்லப்படுகிறார். சர்வவியாபி ஞானத்தின் மூலம் யாருக்கும் சத்கதி கிடைக்கவில்லை. ஒரு சிவபாபா பதித பாவனர் ஆவார், அவர் ருத்ரன் எனவும் சொல்லப்படுகிறார். ருத்ர யக்ஞம் என்பதும் புகழ் வாய்ந்ததாகும். இவ்வளவு பெரிய யக்ஞத்தை வேறு யாராலும் நடத்த முடியாது. ருத்ர ஞான யக்ஞம் எத்தனை வருடங்கள் நடக்கும்? ஞானத்தை சொன்னபடியே இருக்கிறார். யக்ஞத்தை நடத்தும் போது அதில் சாஸ்திரங்களையும் வைக்கின்றனர். இராமாயணம், பாகவதம் முதலான கதைகளை சொல்கின்றனர், அதனை ருத்ர யக்ஞம் என சொல்கின்றனர். உண்மையில் ருத்ர யக்ஞம் இதுவாகும். இந்த யக்ஞம் வெகு காலத்திற்கு நடக்கிறது. அவர்களுடைய யக்ஞம் அதிக பட்சம் ஒரு மாதம் வரை நடக்கும். இதனைப் பாருங்கள் எவ்வளவு காலம் நடக்கிறது. இருக்கக் கூடிய பழைய பொருட்கள் அனைத்தும் இதில் அழிய வேண்டியுள்ளது. இந்த பழைய உலகம் முழுவதும் இதில் பஸ்மம் ஆக வேண்டியுள்ளது. எத்தனை பெரிய யக்ஞமாக உள்ளது என சிந்தித்துப் பாருங்கள். அனைவரின் சரீரமும் ஸ்வாஹா (அர்ப்பணம்) ஆகும் போது அனைத்து ஆத்மாக்களும் பரமதாமத்திற்குத் திரும்பிச் செல்வார்கள். தந்தை வராத வரை தூய்மையற்றவர்களை யார் தூய்மையாக்குவது, மாயையின் சங்கிலியிருந்து விடுவிப்பது யார்? யாராவது இருக்க வேண்டும் அல்லவா. ஆகையால் எஜமானர் தாமே வருகிறார். சர்வவியாபியாகி அமர்ந்து ஞானத்தைக் கொடுக்கிறார் என்பதல்ல. அவர் வரவே செய்கிறார். நாங்கள் (பி.கு.க்கள்) அவருடைய குழந்தைகள், பேரப் பிள்ளைகள். உண்மையில் நீங்களும் கூட அவருடைய குழந்தைகள். இப்போது அந்த தந்தை வந்து விட்டுள்ளார், தனது அறிமுகத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சொர்க்கத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. நாங்கள் இராஜயோக ரிஷிகள், அவர்கள் அடயோக ரிஷிகள். இதைப் பற்றி ஒரு கதை கூட எப்போதாவது சொல்வதுண்டு - இன்ன ரிஷியின் எடை (பெருமை) அதிகமா? அல்லது இராஜரிஷியின் எடை அதிகமா?. அவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் விசயங்களாகும், இது ஞான மார்க்கமாகும். பக்தி மற்றும் ஞானத்தின் தராசு பற்றி ஏதோ கதை கூட இருக்கிறது. ஒரு பக்கம் பக்தியின் அனைத்து சாஸ்திரங்கள், மற்றொரு பக்கம் ஞானத்தின் ஒரு கீதை. அப்போது ஒரு கீதையின் பக்கம் எடை அதிகமாக ஆகி விடுகிறது. கீதை இராஜரிஷிகளுடையதாகும், அட யோகிகளுடையது பல சாஸ்திரங்கள் உள்ளன. ஒரு பக்கம் அவையனைத்தையும் வையுங்கள், மறு பக்கம் கீதையை வையுங்கள், உண்மையில் அதுவும் கூட (பக்தியின் கீதை) நம்முடையதல்ல. நம்முடையதே ஞானத்தின் விசயமாகும். கீதையின் பகவான் வருவதே சத்கதியைக் கொடுப்பதற்காகும். ஆக, குழந்தைகளின் புத்தியில் இவையனைத்தும் இருக்க வேண்டும். பிறகு புரிந்து கொள்வார்களோ இல்லையோ, நம்முடைய கடமை அனைவருக்கும் புரிய வைப்பதாகும். மரணத்தின் சமயத்தில் அனைவருடைய கண்களும் திறக்கும். இந்த ஞான யக்ஞத்திலிருந்தே வினாசத்தின் ஜுவாலை எழுந்தது. இப்போது பாண்டவர்களாகிய உங்களின் பதி பரமபிதா பரமாத்மா ஆவார். தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் ஒரு பரமாத்மாவே ஆவார், கிருஷ்ணர் அல்ல. அவர் இளவரசன் ஆவார். அவரை இறைத் தந்தை என சொல்ல மாட்டார்கள். குழந்தைகளுக்கு பிறவி கொடுக்கும் போது ஒருவர் தந்தை என அழைக்கப்படுகிறார். கிருஷ்ணரோ அவரே குழந்தையாக இருக்கிறார், அவரை தந்தை என எப்படி சொல்ல முடியும்? சட்டம் கிடையாது. கிருஷ்ணருடன் பிறகு ஜோடி தேவைப்படுகிறது. அவர்களுக்கு குழந்தை இருக்க வேண்டும், அப்போது தந்தை என சொல்லலாம். பிறகு அவர் இல்லறத்தவராக ஆகி விடுகிறார். இங்கே நிராகாரமான தந்தை அமர்ந்து ஞானத்தைக் கொடுக்கிறார். அவர் ஒருபோதும் இல்லறத்தில் வருவதில்லை, எப்போதும் தூய்மையானவர். கிருஷ்ணரோ தாயின் கர்ப்பத்தில் பிறவி எடுக்கிறார் எனும் போது அவரை பதித பாவனர் என எப்படி சொல்ல முடியும்? பரமபிதா பரமாத்மா பிரஜாபிதா பிரம்மாவின் சரீரத்தில்தான் வர வேண்டியுள்ளது என இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பிரஜாபிதா கண்டிப்பாக இங்கே தேவைப் படுகிறார் அல்லவா, ஆகையால் அவருக்கு பிரம்மா என பெயர் வைத்து நான் சாதாரணமான சரீரத்தில் பிரவேசமாகிறேன் என சொல்கிறார். இவர் 84 பிறவிகளை அனுபவித்து இப்போது கடைசி பிறவியில் இருக்கிறார் மற்றும் வானபிரஸ்த நிலையில் எல்லா அனுபவங்களும் நிறைந்த இரதமாக இருக்கிறார். பல குருமார்களை பின்பற்றினார் என அர்ஜுனனைக் குறித்தும் கூட சொல்கின்றனர் அல்லவா. சாஸ்திரங்கள் முதலானவைகளை படித்தவர்களாக இருந்தால் இப்படி புரிய வைக்க வேண்டும். பிரஜாபிதா பிரம்மாவின் பெயரை எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிரம்மா இருக்கிறார் என்றால் கண்டிப்பாக பிராமணரும் இருக்க வேண்டும். வர்ணங்களும் கூட முக்கியமாகும். சக்கரத்தில் கூட வர்ணங்களை காட்டுகிறோம். பிராமண குலம் அனைத்தையும் விட சிறியதாகும். அவர்கள் ஞானத்தை எடுப்பதும் கூட கொஞ்ச காலமேயாகும். எவ்வளவு குறைவான பிராமணர்கள் இருக்கின்றனர். பிறகு அவர்களை விட அதிகமான தேவதைகள், அவர்களையும் விட அதிகமான க்ஷத்திரியர்கள், அவர்களையும் விட அதிகமான வைசிய, சூத்திரர்கள். ஆக, பிராமணர்களாகிய நீங்கள் எவ்வளவு குறைவானவர்களாக இருக்கிறீர்கள். இந்த குறைவானவர்களிலும் கூட எப்போதும் குஷியின் அளவு அதிகமாகவே இருக்கக் கூடியவர்கள் மிகவும் குறைவானவர்களே ஆவர். குஷியின் அளவு அமிர்த வேளையில் அதிகரிக்கும் என தந்தை புரிய வைத்திருக்கிறார். பகலும் இரவிலும் வாயுமண்டலம் மிகவும் அழுக்காக இருக்கும், அந்த நேரங்களில் நினைவு செய்வது கடினமாக இருக்கும். அமிர்த வேளையின் நேரம் பாடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில்தான் அனைத்து ஆத்மாக்களும் களைத்துப் போய் சரீரத்திலிருந்து விலகி தூங்கிப் போகின்றனர். அது சுப முகூர்த்த நேரமாகும். தந்தையின் நினைவு நடந்து சுற்றியபடி உள்ளத்தில் இருக்கவே வேண்டும். மற்றபடி வலுக்கட்டாயமாக ஒரு இடத்தில் அமர்ந்து நினைவு செய்தீர்கள் என்றால் நினைவு நிலையாக இருப்பதில்லை. ரிஷி, முனிவர்கள், பக்தர்கள் கூட அமிர்தவேளையில் எழுந்து கீர்த்தனங்கள் முதலானவைகளைப் பாடுகின்றனர், ஏனென்றால் அந்த சமயத்தில் சுத்தமான வாயுமண்டலம் இருக்கும். ஆக யார் வந்தாலும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் - நாங்கள் படித்துக் கொண்டிருக்கிறோம். இதில் குருட்டு நம்பிக்கையின் விசயமே எதுவும் கிடையாது. நிராகார தந்தை ஆசிரியரின் ரூபத்தில் எங்களுக்கு இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறார். அப்போது மனிதர்கள் இவர்களுக்கு நிராகாரமானவர் எப்படி படிப்பிக்கிறார் என ஆச்சரியப்படுவார்கள். பகவானுடைய மகா வாக்கியம் என்பதும் கூட சரியேயாகும் என்றால் கண்டிப்பாக சரீரத்தில் வந்து இராஜயோகம் கற்பித்திருப்பார். ஏதேனும் சரீரத்தை கடனாகப் பெற்றிருப்பார், எனவே முதலில் யுக்தியுடன் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். சர்வவியாபி என சொல்வதன் மூலம் என்ன ஆஸ்தி கிடைக்கும். எதுவரை பகவானுடைய மகா வாக்கியம் காதில் படவில்லையோ அதுவரை யாரும் எதுவும் புரிந்து கொள்ள முடியாது. பகவான் நிராகாரமானவர், பிரம்மா சாகாரமான பிரஜாபிதா ஆவார், நீங்கள் பிரம்மாகுமார், பிரம்மாகுமாரிகள் ஆவீர்கள். நிராகாரமான பரமாத்மா பிரம்மாவின் உடலின் மூலம் படிப்பிக்கிறார். நம்முடைய இலட்சியமும் குறிக்கோளும் மனிதரிலிருந்து தேவதையாக வேண்டும் என்பதாகும். தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்தீர்கள் என்றால் தந்தையின் நினைவு இருக்கும். பகவான் உடலற்றவர் என ஒரு சிலர் எழுதுகின்றனர், அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். ஒரு சிலர் எங்களுக்கு தெரியவே தெரியாது என எழுதுகின்றனர். அட, உங்களுக்கு தந்தையைத் தெரியாதா? பரமபிதா பரமாத்மா என சொல்கிறீர்கள் எனும்போது அப்படியாராவது இருக்க வேண்டும் அல்லவா. நாம் பரமபிதா பரமாத்மாவின் மூலம் எதிர்காலத்தின் பல பிறவிகளுக்கான வாழ்க்கையை பிராப்தி செய்கிறோம் என குழந்தைகளுக்குத் தெரியும். இதில் தடைகளை ஏற்படுத்துபவர்களுக்கு எவ்வளவு பாவம் ஏற்பட்டு விடுகிறது. அதுவும் புரிந்து கொண்டு தடைகளை ஏற்படுத்துகின்றனர். அறியாதவர்கள் மீது எந்த தோசமும் கிடையாது. அந்த முழு உலகமுமே புரியாத ஒன்றாக இருக்கிறது. நல்லது!



இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள்... இதன் ஒவ்வொரு வார்த்தையின்அர்த்தத்தையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். முதன் முதலில் தாய் தந்தை, பிறகு பாப்தாதா. யார் சொர்க்கத்தின் எஜமானாக ஆக்குகின்றனரோ அவர்களே தாய் தந்தை எனப்படுகின்றனர். பிறகு இவர்கள் பாப்தாதா என ஆகி விட்டனர். பிறகு ஜகதம்பா என சொல்கிறோம், இது மிகவும் ஆழமான விசயங்களாகும். இது அனைத்தையும் விட ஆழமான புதிர் ஆகும், இதனைப் புரிந்து கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு மிகவும் இலாபம் ஏற்படுகிறது. பிறகு சொல்கிறார் - காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளே. இது மற்றொரு புதிர் ஆகும். பிறகு சொல்கிறார் - பிரமண குல பூஷணர்களே, சுயதரிசன சக்கரதாரிகளே - இதுவும் கூட புதிய புதிர் ஆகும். ஒவ்வொரு விசயத்திலும் புதிர்தான் நல்லது.



சுயதரிசன சக்கரதாரிகள், கண்ணின் மணிகளுக்கு அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம் .



தாரணைக்கான முக்கிய சாரம் :

1 . அமிர்த வேளையின் சுப முகூர்த்தத்தில் தந்தையை மிகவும் அன்போடு நினைவு செய்து குஷியின் அளவை அதிகரித்துக் கொள்ள வேண்டும். நடந்தும் சுற்றியபடியும் இருக்கும் போது கூட நினைவின் பயிற்சியை செய்ய வேண்டும்.



2. பாவ கர்மங்களிலிருந்து விடுபடுவதற்காகவும், ஞானம் நல்ல விதமாக தாரணை ஆவதற்காகவும் ஒரு தந்தையிடம் புத்தியின் தொடர்பை இணைப்பதற்கான முயற்சியை செய்ய வேண்டும்.



வரதானம் :

திருப்தியாக இருந்து அனைவரையும் திருப்திப் படுத்தக் கூடிய சுப பாவனை மற்றும் சுப விருப்பங்களால் நிறைந்தவர் ஆகுக.



பிராமணர்கள் என்றாலே திருப்தியாக இருந்து அனைவரையும் திருப்திப் படுத்தக் கூடியவர்கள், ஆகையால் என்ன ஆனாலும், யார் எவ்வளவு அசைக்கப் பார்த்தாலும், திருப்தியுடன் இருக்க வேண்டும் மற்றும் திருப்திப் படுத்த வேண்டும் என்ற நினைவு இருந்தது என்றால் ஒருபோதும் கோபம் வராது. ஒரு வேளை யாராவது மீண்டும் மீண்டும் தவறு செய்தாலும் அவர்கள் மீது கோபப்பட வேண்டாம், இரக்க மனம் கொண்டு சுப பாவனை, சுப விருப்பத்தின் திருஷ்டியை வைத்தீர்கள் என்றால் அவர்கள் சகஜமாக மாறி விடுவார்கள்.



சுலோகன் :

பரமாத்மாவின் அன்பை அனுபவிப்பவர்களாக ஆகிவிட்டீர்கள் என்றால் எப்படிப்பட்ட விசயமும் உங்களை நிறுத்த முடியாது.




***OM SHANTI***